இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் குழு மாற்றம்!; நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி வேட்பாளர்களும் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணி மேற்கொள்ள தேர்தல் பணிக் குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை மாற்றி வரும் ஜெயலலிதா இப்போது இடைத் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட குழுவையும் மாற்றியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

அக்டோபர் மாதம் 13-ம் தேதி நடைபெற உள்ள திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- 1. நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக பொருளாளர்), 2. வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் (தலைமை நிலையசெயலாளர்), 3. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் (திண்டுக்கல் மாவட்ட செயலாளர்), 4. உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி (கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்), 5. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர்), 6. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு,

7. சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா (மகளிர் அணி செயலாளர்), 8. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் பி.வி.ரமணா (திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர்), 9. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் (மாணவர் அணி செயலாளர்), 10. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்பிரமணியன், 11. போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி (கரூர் மாவட்ட செயலாளர்), 12.தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் (அண்ணா தொழிற்சங்கப்பேரவை இணை செயலாளர்),

13. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி (திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர்), 14. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அ.முஹம்மத்ஜான், 15. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அ.அன்வர்ராஜா, 16. இலக்கிய அணி செயலாளர் டாக்டர் வைகைச் செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அதிமுக வேட்பாளரின் வெற்றிக்குப்பாடுபட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.கவுக்கு புதிய நீதிக் கட்சி ஆதரவு:

இந் நிலையில் திருச்சி (மேற்கு) தொகுதி இடைத்தேர்தலிலும், தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.கவுக்கு புதிய நீதிக்கட்சி முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளாக அறிவித்த பல்வேறு சலுகைகளை உடனடியாக நாட்டு மக்கள் அனைவரும் மகிழும் வண்ணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றி வருகிறார்.

இதனால் திருச்சி (மேற்கு) தொகுதி இடைத்தேர்தலிலும், தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.கவுக்கு புதிய நீதிக்கட்சி முழுமையான ஆதரவு அளிக்கிறது.

தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அனைத்து திட்டங்களும் கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டியுள்ளதால் இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு பெரும்பான்மையான வெற்றியை தேடித்தர புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பாடுபட்டு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெற்றியை பரிசாக அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவி வேட்பாளர்களும் மாற்றம்:

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், மாநகர மன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்த வேட்பாளர்களுக்கு பதில் கீழ்க்கண்ட புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி:- எம்.ஜி. முத்துராஜ், சோழவந்தான் பேரூராட்சி- ஆர். பாண்டியம்மாள், தேனி ஹைவேவிஸ் பேரூராட்சி- எம். சுரேஷ். கடம்பத்தூர் ஒன்றியம் 6-வது வார்டு- பாசூரான் காங்கயம் ஒன்றியம் 8-வது வார்டு- கோவிந்தசாமி வாடிப்பட்டி ஒன்றியம் 7-வது வார்டு- செல்லப் பாண்டி மாநகராட்சி கவுன்சிலர் சென்னை 131-வது வார்டு-எம். குணசேகரன் வேலூர் 48-வது வார்டு- பாண்டியன் வேலூர் 54-வது வார்டு- ஷகிராபேகம் சேலம் 48-வது வார்டு- எஸ். ஜெயா என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+