வேலூர்: இறந்த பேரனின் உடலை ஆற்றில் வீசிய முதியவருக்கு அடி-உதை
குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் இறந்த குழந்தையை ஆற்றில் வீசிய முதியவரை அப்பகுதி மக்கள் பிடித்து நையப் புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே காமராஜர் பாலம் உள்ளது. இன்று காலை 8. 15 மணியளவில் அந்த பாலத்தில் முதியவர் ஒருவர் கையில் ஒரு பெரிய துணி மூட்டையுடன் பதட்டத்துடன் நடந்து சென்றார். பாலத்தின் மையப் பகுதிக்கு சென்ற அவர் திடீர் என்று தன் கையில் வைத்திருந்த மூட்டையை ஆற்றில் வீசிவிட்டுச் சென்றார்.
அதைப் பார்த்த பொதுமக்கள் முதியவர் மீது சந்தேகம் அடைந்தனர். உடனே சிலர் முதியவரைப் பிடித்தனர், சிலர் ஆற்றுக்குள் இறங்கி துணி மூட்டைய எடுத்தனர். மூட்டையைப் பிரி்த்துப் பார்த்தபோது அதில் இறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் இருந்தது. இதைப் பார்த்த மக்கள் திடுக்கிட்டனர். சிலர் ஆத்திரத்தில் முதியவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை காவல் நியைத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் கூறியதாவது,
என் பெயர் நடராஜன். கோப்பம்பட்டியில் வசிக்கிறேன். கணவரைப் பிரிந்து வாழும் எனது மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. அதில் ஆண் குழந்தை இறந்துவிட்டது. அதைத் தான் நான் ஆற்றில் வீசினேன் என்றார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications