தபால் நிலையங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை துவக்கம்: விலை ரூ. 3,790
நெல்லை: தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை துவங்கியுள்ளது.
கடித போக்குவரத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்த தபால் துறை இன்று பல துறைகளில் தடம் பதித்து வருகிறது. மியூச்சுவல் பன்ட் துவங்கி தங்கம் வரை விற்பனை செய்து வருகிறது. அடுத்த கட்டமாக வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள தபால் நிலையங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.
நெல்லையிலும் மினி பிரிட்ஜ் விற்பனயைத் துவங்க அதிகாரிகள் திட்டமிட்டனர். இதையடுத்து கோத்ரேஜ் நிறுவனத்துடன் இணைந்து மினி பிரிட்ஜ் விற்பனை துவங்கப்பட்டது. 43 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த மினி பிரிட்ஜில் 4 முதல் 5 ஒரு லிட்டர் பாட்டில்கள், 2 முதல் 3 கிலோ காய்கறிகள், 2 லிட்டர் வரை பால், 3 பாத்திரங்கள் வைக்கலாம்.
8.9 கிலோ எடை கொண்ட இந்த மினி பிரிட்ஜ் 230 வோல்ட் மின்சாரத்திலும், இன்வென்டரிலும் செயல்படும். இதை வியாபாரத்திற்கும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 3,790 ஆகும். இந்த மினி பிரிட்ஜை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.
நெல்லை கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ரூ. 3,790 செலுத்தினால் 5 நாட்களுக்குள் மினி பிரிட்ஜ் வீடு தேடி வரும் என்று பாளையங்கோட்டை தபால் துறை அலுவலர் கனகசபாபதி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications