கிங்ஃபிஷர் குறைந்த கட்டண சேவைக்கு மூடுவிழா - விஜய் மல்லையா அறிவிப்பு!

2006-ம் ஆண்டு விமானசேவையைத் தொடங்கியது கிங்பிஷர். அடுத்த சில ஆண்டுகளில், அன்றைக்கு பிரபலமாக இருந்த குறைந்த கட்டண விமான நிறுவனமான கோபிநாத்தின் ஏர் டெக்கனை வாங்கியது.
இதன் மூலம் இந்திய விமானத் துறையில் கணிசமான பங்கை விஜய் மல்லையாவின் கிங்பிஷர் பெற்றது. ஏர் டெக்கனை கிங்பிஷர் ரெட் என்று பெயர் மாற்றி இயக்கியது.
ஆனால் அந்த சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரிவு நஷ்டத்திலேயே இயங்கியது. கடந்த 2010-ன் மூன்றாம் காலாண்டில் ரூ 187 கோடி நஷ்டத்தைச் சந்தித்த கிங்பிஷர் ரெட், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் காலாண்டில் ரூ 263.54 நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், நிறுவனத்தின் கடன் சுமை ரூ 6000 கோடியாக உயர்ந்துவிட்டது.
இந்த சிக்கல்களிலிருந்து விடுபட, சில முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளது கிங்பிஷர். இதுகுறித்து விஜய் மல்லையா இன்று பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த மல்லையா கூறுகையில், "குறைந்த கட்டண விமான சேவை லாபம் தரும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை மற்றும் குறைந்து கொண்டே போகும் ரூபாய் மதிப்பு. எனவே தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க விரும்பவில்லை. கிங்பிஷர் ரெட் சேவை நிறுத்தப்படுகிறது," என்றார்.
ஏற்கெனவே கிங்பிஷர் நிறுவன ஆடிட்டர்கள், நிறுவனத்தின் மதிப்பு முற்றாக குறைந்துவிட்டதாகவும், புதிய மூலதனத்தைச் செலுத்துவது அவசியமென்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கிங்பிஷருக்கு புதிதாக ரூ 2000 கோடியை முதலீடாக செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான உரிமைப்பங்குகள் வெளியிட இயக்குநர் குழு அனுமதித்திருப்பதாகவும் கடந்த ஆகஸ்டில் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் அளித்திருந்தது கிங்பிஷர்.
இப்போது மல்லையாவின் புதிய அறிவிப்பு மூலம் கிங்பிஷரின் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனால், கிங்பிஷர் விமான சேவையில் 70 சதவீத வருமானம் குறைந்தகட்டண சேவை மூலமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications