சிங்கூர் நிலம்: மம்தா அரசின் சட்டம் செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
கொல்கத்தா: சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் சட்டம் செல்லும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அதே நேரம், டாடா நிறுவனம் நஷ்டஈடு கோரி மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணபிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் முந்தைய கம்யூனிஸ்ட் ஆட்சியின்போது சிங்கூரில் நானோ கார் தொழிற்சாலை அமைப்பதற்காக பல நூறு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த நில கையகப்படுத்தலுக்கு விவசாயிகள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி பெரும் போராட்டம் நடத்தியதால், தனது புதிய கார் தொழிற்சாலை திட்டத்தை குஜராத் மாநிலத்துக்கு டாடா நிறுவனம் மாற்றிக் கொண்டது. எனினும், சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம், டாடா நிறுவனம் வசமே இருந்தது.
மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜி, சிங்கூர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றினார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
விசாரணையின் முடிவில், சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் சட்டம் செல்லும் என கோல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு டாடா நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications