பேஸ்புக் அப்ளிகேஷன்களை அறிய உதவும் ஆப்பிஷ்ஷிங்.காம்

சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஜிபூம் (gBoom) இந்த இணையத்தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையத்தளத்தில் பேஸ்புக்கில் என்னென்ன அப்ளிகேஷன்ஸ் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த இணையத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் அது வாடிக்கையாளர்களின் விருப்பம், ரசனையைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிந்துரை செய்யும்.
உதாரணமாக ஒருவருக்கு ஆன்லைன் விளையாட்டு பிடிக்கும் என்றால் அவர் ரசனைக்கேற்ற விளையாட்டை இந்த இணையத்தளம் பரிந்துரைக்கும்.
இது குறித்து ஜிபூம் சிஇஓ பிரதீப் விஜயகுமார் கூறியதாவது,
பேஸ்புக்கில் ஏராளமான அப்ளிகேஷன்ஸ் உள்ளன. ஆனால் பயனீட்டாளர்களுக்கு தங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் பயன்படுத்த விரும்புவார்கள். அதற்காகத் தான் ஆப்பிஷ்ஷிங்.காம் துவங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தொழில்நுட்பம் மூலம் உங்கள் ரசனை கண்டறியப்பட்டு அதற்கேற்ப அப்ளிகேஷன்கள் பரிந்துரைக்கப்படும்.
என்னென்ன அப்ளிகேஷன்ஸ் உள்ளது என்று பட்டியலிடுவது பேஸ்புக்கை உபயோகிப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.
ஆப்பிஷ்ஷிங் அப்ளிகேஷனை டெளன்லோட் செய்ய- www.AppFishing.com


Click it and Unblock the Notifications
