திருச்சி இடைத்தேர்தல் அதிமுக குழு மீண்டும் மாற்றம்: ரபி பெர்னார்டுக்கும் இடம்
சென்னை: திருச்சி மேற்கு இடைத் தேர்தலுக்கான அதிமுக பணிக் குழுவை முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீண்டும் மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏற்கனவே 16 பேர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தார்கள்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும், வனத் துறை அமைச்சருமான கே.டி.பச்சைமால், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், எம்.எல்.ஏ., மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ.சரோஜா,
கரூர் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பாசுந்தரம், எம்.எல்.ஏ., அரியலூர் மாவட்ட செயலாளர் துரை மணிவேல், எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் எஸ்.காமராஜ், எம்.எல்.ஏ., ப.குமார் எம்.பி., ஏ.வில்லியம் ரபி பெர்னார்ட் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அதிமுக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் இந்தக் குழுவை 2வது முறையாக ஜெயலலிதா மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications