கருணாநிதி எனக்கு திசை காட்டும் விளக்கு: மன்மோகன் சிங்
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்த்துக்கள் எனக்கு திசை காட்டும் விளக்காக விளங்குகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 79வது பிறந்த நாள். அப்போது அவர் நியூயார்க்கில் இருந்த நிலையில் அவருக்கு கருணாநிதி வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார். அதில்,
உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். எத்தனையோ கணக்கில் அடங்காத பிரச்சனைகள் இருந்தபோதிலும் அவற்றை உங்களது சிறந்த திறமையான அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றால் தீர்த்து வைத்துள்ளீர்கள். நீங்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியுடனும் உடல் நலத்துடனும் வாழ மீண்டும் வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து திரும்பி. மன்மோகன் சிங்கை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கருணாநிதியின் சார்பில், பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது மன்மோகன் சிங் கூறுகையில், இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் தலைவரான கருணாநிதியின் வாழ்த்துக்களை நான் நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்கிறேன். அவரது அன்பான வாழ்த்துக்களும், அறிவுரைகளும் எனக்கு திசைக் காட்டும் விளக்காகவும், என்னை ஊக்குவித்து முன்னெடுத்துச் செல்லும் சக்தியாகவும் விளங்குகிறது என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications