புலி சைவமாக மாறியதைப் போல பழைய திமிரில் பேசுகிறார் அழகிரி-செல்லூர் ராஜு
மதுரை: தி.மு.க. ஆட்சியில் பல்வேறு காலக் கட்டங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தது மு.க.அழகிரி தான். ஆனால் இப்போது புலி சைவமாக மாறியதை போல அவர் பழைய திமிரில் பேசியுள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த போது நடந்த சில சம்பவங்களை சுட்டிக் காட்டி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதிமுக-வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவதை போல ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி பேசியுள்ளார்.
தி.மு.க. வேட்பாளர் மனு தாக்கலின் போது தேர்தல் அதிகாரியிடம் உங்களை தனியாக சந்திக்க வேண்டும் என்று அதிகார தோரணையில் மிரட்டி உள்ளார். இந்த செயலுக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவிக்கின்றது.
மதுரை நகரில் சுவர் விளம்பரங்களை தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் -தான் வரைந்துள்ளனர். ஏற்கனவே நடந்த திமுக ஆட்சியில் பல்வேறு கால கட்டங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்தது மு.க.அழகிரி தான். ஆனால் இப்போது புலி சைவமாக மாறியதை போல அவர் பழைய திமிரில் பேசியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை காட்டி இது தேர்தலுக்காக எழுதப்பட்டதாக மு.க. அழகிரி பொய் புகார் கூறியுள்ளார். தி.மு.க. ஆட்சியில் மதுரை மக்களை கொள்ளையடித்து சுரண்டி பல்வேறு சமூக விரோத செயல்களை செய்த மு..க.அழகிரியும் அவரது கூட்டாளிகளும் தற்போது நல்லவர்களை போல நடித்து வருகின்றனர்.
ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேசாத மு.க.அழகிரி அ.தி.மு.க.வினர் மீது குறை கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றி, உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு கிடைக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications