வாச்சாத்தி- பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு திமுக சார்பில் ரூ. 15,000 நிதி

Subscribe to Oneindia Tamil

Vachathi Rape Victims
சென்னை: வாச்சாத்தி கிராமத்தில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ. 15,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட வாச்சாத்தி கிராமத்துக்குள் கடந்த 1992-ம் ஆண்டு சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்பவர்களை கண்டுபிடிப்பதாக கூறி, வனத்துறை, காவல் துறை, வருவாய் துறைகளைச் சேர்ந்த 269 பேர் உள்ளே நுழைந்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வன்முறை கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் தர்மபுரி அமர்வு நீதி மன்ற நீதிபதி விசாரித்தார்.

வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கியதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

இந்த நிவாரணத் தொகை மிகவும் குறைவு என்றும், போதாது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மழைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் சண்முகம் விடுத்த கோரிக்கையினை ஏற்று, திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளையின் சார்பில் தலா ரூ.15 ஆயிரம் உதவி நிதியாக வழங்கப்படும்.

இந்த நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு தர்மபுரி நாடாளுமன்ற கழக உறுப்பினர் தாமரைச் செல்வன் நேரில் சென்று இன்னும் 2 நாட்களில் வழங்குவார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

வாச்சாத்தியில் நடந்த அட்டூழியத்தின்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது அதிமுக, முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+