மட்டன் பிரியாணி-பணம்: தி.மு.க. வேட்பாளர் கைது

Subscribe to Oneindia Tamil

திருமங்கலம்: திருமங்கலம் 3-வது வார்டின் தி.மு.க. வேட்பாளர் ஜெயபால் மற்றும் மேலூர் தெற்கு தெரு ஊராட்சி தலைவர் பதவி வேட்பாளர் போஸ் ஆகியோர் ஆதரவாளர்களுக்கு பணம் கொடுக்கும் போது கைது செய்யப்பட்டார்.

திருமங்கலம் நகரசபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். அப்போது தி.மு.க. சார்பாக 3வது வார்டில் போட்டியிடும் ஜெயபால்(49) தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு செய்தார். பின்பு உடன் வந்தவர்களுடன் அண்ணா நகர் நோக்கி செல்லும் போது திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு முன்பு பணம் கொடுத்தார்.

இது குறித்து திருமங்கலம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி பால்ராஜ் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தற்கு விரைந்த போலீசார் பணம் கொடுத்த தி.மு.க. வேட்பாளர் ஜெயபாலை கைது செய்தனர். அவரிடமிருந்து 2,900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, மேலூர் தெற்கு தெரு ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.-வை சேர்ந்த போஸ் நேற்று மனுத்தாக்கல் செய்தார். பின்பு அவர் 4 வழிச்சாலையில் உள்ள ஒரு வீட்டில் தனது ஆதரவாளர்களுக்கு பணம் மற்றும் மட்டன் பிரியாணி வைத்திருந்தார்.

தகவலறிந்த இன்ஸ்பெக்டர் மாடசாமி விரைந்து சென்று பிரியாணி பொட்டலங்களை பறிமுதல் செய்தார். மேலும், உணவு வழங்கிய 7 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+