இந்திய அளவில் ரப்பர் ஏற்றுமதி-கன்னியாகுமரி வியாபாரிக்கு 2ம் இடம்

Subscribe to Oneindia Tamil

Rubber
குமரி: ரப்பர் ஏற்றுமதியில் குமரி மாவட்ட ரப்பர் ஏற்றுமதியாளர், இந்தியாவில் 2ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ரப்பர் ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு ரப்பர் கழகமும், ரப்பர் ஏற்றுமதி செய்கிறது. குமரி திற்பரப்பை சேர்ந்த அனில்குமார் பல நாடுகளுக்கு ரப்பர் ஏற்றுமதி செய்து வருகிறார்.

ரப்பர் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி செய்யப்படும் ரப்பரின் அளவை இந்திய அளவில் ரப்பர் போர்டு வெளியிடுகிறது. இப்பட்டியலில் இந்திய அளவில் 21 ரப்பர் சங்கங்களை உள்ளடக்கிய ஆல் இந்தியா ரப்பர் டீலர்ஸ் அசோஷியேஷன் சார்பில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் நிறுவனங்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

இதன்படி 2010-2011ம் ஆண்டு ரப்பர் ஷீட் அதிக அளவு ஏற்றுமதி செய்து இரண்டாம் இடத்தை பிடித்த குமரி மாவட்ட ரப்பர் ஏற்றுமதியாளர் அனில்குமாருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் இடத்தை கொச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆர்.ஒன்., இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+