மாயமான சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசியவர் கைது
திசையன்விளை: நெல்லையில் சிறுவன் மாயமான வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசியதாக தெரிவி்த்துள்ளார்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த பெரியவிளை கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜ். காய்கறி வியாபாரி இவரது 2வது மகன் அன்புசெல்வன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலையில் வெளியே சென்ற அன்புசெல்வன், இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை வரை சிறுவன் அன்புசெல்வன் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சியடைந்த லிங்கராஜ் குடும்பத்தினருடன் சேர்ந்து தேடி விசாரித்தனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த புதுமாப்பிள்ளை சிறுவன் அன்புசெல்வனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து லிங்கராஜ் திசையன்விளை போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் சிறுவன் அன்பு செல்வன் மாயமானதில் நடராஜன் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் நடராஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் அன்பு செல்வனை ஏமாற்றி அழைத்து சென்று நாடார் அச்சம்பாடு முத்தாரம்மன் கோவில் கிணற்றில் வீசி கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து வள்ளியூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இனஸ்பெக்டர்கள் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கிணற்றுக்குள் சிறுவன் அன்புசெல்வன் பிணமாக கிடந்தான். பின்பு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவனின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications