கே.சி.பழனிசாமியை போலீஸ் காவலில் கோரிய மனு தள்ளுபடி
மதுரை: அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ கே.சி.பழனிசாமியை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க
கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நம்பிக்கையான நபர்களில் ஒருவர் கே.சி.பழனிசாமி. இவர்
தற்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். இவர், கடந்த
தி.மு.க. ஆட்சியில் 2006-2011 வரை கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள
காவிரி ஆற்றில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததாக புகார்
எழுந்தது.
இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை குவித்தார் என்று மாயனூர் போலீசார் அவர் மீது 147,
353, 506/2, 3/1, 4(1), 4/1-ஏ, 71(1) போன்ற 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து
கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கே.சி.பழனிசாமி உடன் அவரது
உதவியாளர் சுந்தரேசன், மேலாளர் கிரிராஜன், செந்தில் ராஜா மற்றும் சசிகுமார், குமார்,
ராஜா ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
இதையடுத்து, கே.சி.பழனிசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார்
குளித்தலை மாஜிஸ்திரேட் 2 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி
செய்யப்பட்டது. அதேபோல கே.சி.பழனிசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கரூர்
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை போலீசாரே வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், கே.சி.பழனிசாமியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதி
மன்ற மதுரை கிளையில் மாயனூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா மனு தாக்கல் செய்தார். மனுவை
விசாரித்த நீதிபதி மாலா, கே.சி.பழனிசாமியின் வயதை கருத்தில் கொண்டு அவரை போலீஸ்
காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications