முன்னாள் முதல்வர் மகனிடம் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
திருவனந்தபுரம்: முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் மகன் அருண்குமாரிடம் விசாரிக்க எந்த தடையும் இல்லை என கேரள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் கேரள முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான அச்சுதானந்தனின் மகன் அருண்குமார். இவர் கேரள அரசின் உயர் தொழில்நுட்ப வேளாண்துறையில் உயர் அதிகாரியாக உள்ளார். கடந்த 2005ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சந்தன தொழிற்சாலை அதிபரிடம் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக அருண்குமார் மீது புகார் கூறப்பட்டது.
இந்த புகார் குறித்து எதிர்கட்சியினர் சட்டசபையில் பிரச்சனையை கிளப்பிய போது முதல்வராக இருந்த அச்சுதானந்தன் எழுத்து மூலமாக புகாரை தரும்படியும் அதன்பிறகு விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து எதிர்கட்சியினர் அருண்குமார் மீது எழுத்து பூர்வமாக கொடுத்தனர்.
ஆனால் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அருண்குமார் மீது மேலும் பல புகார்கள் எழுந்தன. கேரளாவை சேர்ந்த சந்தோஷ் மாதவன் என்பவர் அருண்குமார் என்னிடம் விலை நிலத்தை வீட்டுமனையாக மாற்றி தருவதாக கூறி 80 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறினார்.
ஆனால் அவருடைய புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை போல் 19க்கும் மேற்பட்ட புகார்கள் அருண்குமார் மீது உள்ளன. இந்நிலையில் தற்போது முதல்வராக உள்ள உம்மன் சாண்டியிடம் அருண்குமார் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளது. இதனால் அருண்குமார் மீதான புகாரை விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் இடையே அருண்குமார் கேரள உயர்நீதிமன்றத்தில் தன் மீதான புகாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று மனு செய்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அரசு பிறபித்த உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது என தெரிவித்து அருண்குமாரை விசாரிக்க தடையில்லை என தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
