இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள்... தலைவர்கள் மரியாதை!
சென்னை: இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 83 வது பிறந்தநாள். இதையொட்டி அவரது சிலைக்கு சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் சிவாஜி கணேசனின் 83-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சிவாஜி வீட்டில் அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிவாஜி மகன் ராம்குமார், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன் மற்றும் சிவாஜி ரசிகர்கள் பலர் மாலை அணிவித்தனர்.
சிவாஜி மன்ற மாவட்ட தலைவர் மஸ்தான், சூளை ராஜேந்திரன் ஆகியோர் அன்னதானம் வழங்கினார்கள். கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்தனர்.
சீமான்
ராம்குமார், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நிர்வாகிகள் சாகுல்அமீது, தடா சந்திரசேகர், கலைக்கோட்டுதயம், செல்வராஜ், தங்கராசு, அன்பு தென்னரசன் ஆகியோரும் மாலை அணிவித்தனர். சிவாஜி ரசிகர் மன்றத்தினரும் மாலை அணிவித்தார்கள்.
சத்யமூர்த்தி பவனில்...
சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சிவாஜி உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மாலை அணிவித்தார்.
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஆர். தாமோதரன், கொண்டல்தாசன், கே.ஏ.பி. பாலு, அகரம் கோபி, புல்லட் சாகுல், குணசேகரன், தமிழ் செல்வன், சிவாஜி மன்ற தலைவர் பூமிநாதன் ஆகியோரும் மாலை அணிவித்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications