துப்பாக்கி சூட்டில் கர்ப்பணி பலி; குழந்தை உயிருடன் மீட்பு
மாட்ரிட்: இத்தாலியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு புகுந்த மர்மநபர் 2 பெண்களை சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். இதில் கர்ப்பணியாக இருந்து இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
இத்தாலி நாட்டின் மாட்ரிட் பகுதியில் புனித மேரி தேவாலயம் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் 40க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவாயத்திற்குள் தூப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர், பெண்கள் பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பெண்களை நோக்கி தூப்பாக்கியால் அடுத்தடுத்து சுட்டான்.
அதன்பின் சுட்ட நபரும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் கர்ப்பணியாக இருந்த ஒரு பெண்ணின் தலையிலும், மற்றொரு பெண்ணின் மார்பிலும் குண்டு துளைத்தது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பெண்களையும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கர்ப்பணியாக இருந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரோடு இருப்பதை உறுதி செய்த டாக்டர்கள், அதை வெளியே எடுத்தனர். 36 வயதுள்ள தாய் அதிர்ச்சியில் இறந்துள்ள நிலையில், கர்ப்பத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைக்கும் அதிர்ச்சி மற்றும் ஆக்சிஜன் குறைப்பாட்டால் உடல்நிலை பாதிக்கப்படலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், பெண்களை சுட்ட மர்மநபர் பிராத்தனை துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அங்கு வந்து, பிராத்தனை துவங்கும் நேரத்தை குறித்து விசாரித்தார். துப்பாக்கியை ஒரு உறைக்குள் மறைத்துபடி தேவாலயத்திற்குள் நுழைந்த மர்மநபர், முதலில் பின் வரிசைக்கு சற்று முன்னதாக நின்ற கர்ப்பணி பெண்ணை நோக்கி சுட்டான்.
பின்னர் சில அடிகள் முன்னாக நடந்து சென்று தேவாலயத்தின் நடுப்பகுதியில் இருந்த 52 வயது மதிக்கத்தக்க பெண்ணை நோக்கி சுட்டான். அவன் குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து தேடி சென்று சுட்டது தெரிந்தது. பின்னர் தேவாலயத்தின் முன்பகுதிக்கு சென்று தானும் தற்கொலை செய்து கொண்டான், என்றனர்.
மர்மநபர் தேவாலயத்திற்கு வந்து எதற்காக சுட்டான் என்ற காரணம் தெரியவில்லை. சுட்ட நபருக்கு ஏற்கனவே போதை கடத்தல், சிறையில் இருந்து தப்புதல் மற்றும் உள்ளுர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications