ஷான் வார்னை மணக்க லிஸ் ஹர்லி சம்மதம்!

கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் ஹர்லியை சம்மதிக்க வைத்துள்ளார் வார்ன். நேற்று இரவுதான் வார்னை மணக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தாராம் ஹர்லி. இனி நான் உங்களது பெண்ணாக இருக்க விரும்புகிறேன் என்று வார்னிடம் கூறி விட்டாராம் ஹர்லி.
இந்தியரான அருண் நாயரின் மனைவிதான் இந்த லிஸ். ஆனால் அவரும், ஷான் வார்னும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற நெருக்கமான காட்சி அடங்கிய புகைப்படம் வெளியானதும் நாயர் மணமுடைந்தார். இதையடுத்து ஹர்லியை விட்டு அவர் பிரிந்தார். முதலில் அருண் நாயரை பிரியப் போவதில்லை என்று ஹர்லி கூறி வந்தார். பின்னர் அவரும் பிரிந்துவிட்டார். தற்போது வார்னை மணக்க அவர் சம்மதம் கொடுத்து விட்டார்.
இந்த அறிவிப்பை ஷான் வார்ன், ஒரு ஹோட்டலில் நடந்த இரவு விருந்தின்போது முறைப்படித் தெரிவித்தார். கடந்த ஒரு வருடமாகவே இருவரும் பழகி வருகின்றனர். இந்தப் பழக்கம் அருண் நாயர் வாழ்க்கையில் குண்டைப் போட்டது. ஆனால் தற்போது ஷான் வார்ன் வாழ்க்கையில் புது வசந்தத்தைக் கொண்டு வருகிறது. ஷான் வார்ன் பல பெண்களுடன் பழக்கம் உள்ளவர். பெண்களை வீழ்த்தி தனது வலையில் விழ வைப்பதில் கில்லாடி. இருப்பினும் அவரை தனது வழிக்குக் கொண்டு வந்திருக்கிறார் ஹர்லி.
ஹர்லி தனது கணவர் நாயரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார். அதேபோல ஷான் வார்னும், கடந்த 2006ம் ஆண்டே சிமோனிடமிருந்து விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டார். இப்போது இந்த இருவரும் புது மண வாழ்க்கையில் இணையவுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications