2ஜி ஊழல் விவகாரம்: அனில் அம்பானிக்கு நற்சான்றிதழ் அளிக்கவில்லை- சிபிஐ
டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்திற்கும் ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதேசமயம், அனில் அம்பானி குற்றமற்றவர் என்று தாங்கள் நற்சான்றிதழ் அளிக்கவில்லை. விசாரணை தொடர்கிறது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி ஊழல் வழக்கில் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானியின் தொடர்பு குறித்தும் விசாரித்து வருவதாக சிபிஐ கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் ரிலையன்ஸ்சுக்கு 9.9 சதவீத பங்குகள் இருந்தன. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தபோது அதில் ரிலையன்ஸ் பங்குகள் இல்லை.
மேலும் ஸ்வான் டெலிகாமில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே ரிலையன்ஸ் டெலிகாமுக்கு பங்குகள் உள்ளதாக சட்ட அமைச்சக ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் ரிலையன்சுக்கு தொடர்பில்லை என்பது உறுதியாகிறது. இதனால் இந்த வழக்கிலிருந்து ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தை விடுவிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் 2ஜி வழக்கில் கடந்த 29-ம் தேதி சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. அதில் 2ஜி ஊழல் விவகாரத்திற்கும் ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பணப் பரிமாற்றம் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் தொடர்பு என்ற வகையில் அனில் அம்பானிக்கு எதிராக வாய்மொழி ஆதாரமோ அல்லது ஆவணங்களோ விசாரணையில் சிக்கவில்லை. இன்றைய தேதி வரை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனில் அம்பானிக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது சிபிஐ. அதில், அனில் அம்பானிக்கு 2ஜி விவகார்ததில் தொடர்பு இல்லை என்று தெரிவித்த போதிலும் அவர் குற்றமற்றவர் என்று நற்சான்றிதழ் ஒன்றும் வழங்கவில்லை. 2ஜி விவகாரத்தில் அவருக்கு உள்ள தொடர்பு குறி்த்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications