தமிழக மின் தடையை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடையை போக்க, முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும், என பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள மின்தடை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடையும் ஆங்காங்கே அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட முக்கிய காரணங்களில் மின்தடையும் ஒன்று. எனவே தற்போது அமலில் உள்ள மின்தடையை போக்க மத்திய மின் தொகுப்பில் இருந்து, மின்சாரத்தை பெற்று தர வேண்டும். ஏற்கனவே மத்திய அரசிடமிருந்து 1000 மெகாவாட் மின்சார வழங்குமாறு, பிரதமருக்கு கடிதம் எழுதியதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைத்திருந்தால், தற்போது தமிழகத்தில் மின் தடையே இருக்க வாய்ப்பில்லை. தமிழககத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கை எதுவும் எடுத்துள்ளதாக தெரியவில்லை. பண்டிகை காலம் நெருங்கியுள்ளதால், தமிழகத்தில் மின்தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள மின்தடையை போக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications