ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் எம்எல்ஏக்கள் பெரும் ரகளை- ஃபேன் வீச்சு

தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர் சையத் முகம்மது யூசுப் ஷா என்பவர் போலீஸ் காவலில் மர்ம மரணமடைந்துள்ளார். இது ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் புயலைக்கிளப்பி வருகிறது. இன்றும் சட்டசபையில் இதுதொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் உமர் அப்துல்லா பதவி விலக வேண்டும் என்று மக்கள் ஜனநாயக் கட்சி கோரி வருகிறது. இதுதொடர்பான கோரிக்கையை வைத்து இன்று சட்டசபையில் அமளியில் இறங்கியது அக்கட்சி. மேலும் சபையை ஒத்திவைத்து விட்டு இந்த மரணம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதனால் சபையில் பெரும் ரகளையாக இருந்தது.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர் உசேனி அங்கே இருந்த பெடஸ்டல் மின்விசிறியை பிடுங்கி வேகமாக கீழே எறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதில் யாரும் காயமடையவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications