கம்யூனிஸ்ட் ஒரு 'சவலை': ஜி ராமகிருஷ்ணனுக்கு காமெடியன் செந்தில் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Senthil
சென்னை: அதிமுக மற்றும் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கிப் பேச ஆரம்பித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு, தனது கட்சியில் உள்ள காமெடி நடிகர் செந்தில் மூலம் பதிலடி கொடுத்துள்ளது அதிமுக மேலிடம்.

அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து இன்று வெளியாகியிருக்கும் நடிகர் செந்திலின் அறிக்கை இது:

"முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மார்க்சிஸ்ட் இல்லை என்றால் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது என்று அவர் பேசி இருப்பது இமாலய காமெடி. ஜி.ராமகிருஷ்ணன் எங்களையெல்லாம் மிஞ்சிய காமெடி நடிகராகி விட்டார்.

கேரளாவில் கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு சரிந்து விட்டது. அங்கு அந்த கட்சி ஆட்சியில் இல்லை. வேறு மாநிலங்களிலும் செல்வாக்கு போய் விட்டது. அதை ஒரு சவலைப் பிள்ளையாகவே இதர கட்சிகள் பார்க்கின்றனர். அக்கட்சியை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டுதான் செல்ல வேண்டும். தன்னால் நடக்க இயலாது.

கடந்த தேர்தலில் புரட்சித் தலைவி அம்மா போட்ட பிச்சையால் சட்டமன்றத்துக்கு வந்தார்கள். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு மரண அடி கொடுப்பார்கள்," என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+