ஆயுத பூஜையை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: ஆயுத பூஜையை முன்னிட்டு நெல்லைக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06091) நாளை திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயிலில் 17 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications