ராகுல் காந்தி காங்கிரஸின் வருங்காலத் தலைவர்- பிரணாப் முகர்ஜி

Subscribe to Oneindia Tamil

Pranabh Mukherjee and Rahul
கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் கூறியதாவது,

காங்கிரஸ கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி தான். அவருக்கு நாங்கள் எப்பொழுதுமே ஆதரவாக இருப்போம். எங்கள் வருங்கால தலைவர் ராகுல் என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமில்லை அடுத்த பிரதமர் பதவிக்கான வேட்பாளரும் ராகுல் காந்தி தான் என்று கட்சி வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் ராகுல் தான் அடுத்த தலைவராக வேண்டும் என்று விரும்புகின்றனர்.

கட்சி, கட்சி என்று இருக்கும் ராகுல் இந்த ஆண்டாவது திருமணம் செய்துகொள்ள மாட்டாரா என்று நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். வட இந்திய விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்திக்கு நல்ல பெயர் உள்ளது. அவர் திடீர், திடீர் என்று விவசாயிகள் வீடுகளுக்குச் செல்வது, அங்கு தங்குவது அவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சாமானியரைப் போன்று ராகுல் ரயிலில் பயணிப்பதை மற்றவர்கள் குற்றம் கூறினாலும், மக்கள் வரவேற்கத்தான் செய்கின்றனர் என்பதை மறுக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+