சோமாலியாவில் டிரக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 70 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மொகாதிஷு: சோமலியாவில் நடந்த குண்டுவெடிப்பில் 70க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். 40 பேர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

சோமலியா நாட்டின் மொகாதிஷு பகுதியில் 7 அரசு அலுவலகங்கள் உள்ள வளாகம் உள்ளது. இங்கு கல்வித் துறை அலுவலகம், பாதுகாப்பு துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன.

பஞ்சம் மற்றும் பட்டினியால் தவிக்கும் சோமலியா நாட்டின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க பல நாடுகள் முன்வந்தன. இதற்கான தேர்வு நேற்று கல்வித் துறை அலுவலகத்தில் நடந்தது. அந்த தேர்வில் பங்கேற்க, நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் அங்கு வந்திருந்தனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில், அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்திற்குள் நுழைந்த டிரக் ஒன்று, கல்வி அலுவலகத்தின் முன் பயங்கர சத்தத்தோடு வெடித்து சிதறியது. அந்த டிரக்கில் இருப்பு தகடுகள் மற்றும் எரிபொருட்கள் இருந்தது.

இதில் அந்த பகுதியில் இருந்த மற்ற வாகனங்களிலும் தீப்பற்றி எரிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தீயில் சிக்கி தவிப்பவர்களை காப்பாற்ற கூட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 70 பேர் பலியானதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

அல்-கொய்தாவின் துணை இயக்கமான த சாஹாப் என்னும் இயக்கத்தினரே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். வெளிநாட்டு ஏஜன்ட்கள் மற்றும் உளவு பயிற்சி பெற்ற சோமாலிய குழந்தைகளையும் குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது, வெடித்து சிதறிய டிரக்கை ஓட்டிவந்த ஓட்டுநர், முதலில் மத்திய புலனாய்வு துறையின் தலைமை அலுவலகத்தை நோக்கி டிரக்கை ஓட்டி சென்றார். ஆனால் அதற்குள் நுழைய பாதுகாப்பு துறையினர் அனுமதி மறுத்ததால், அங்கிருந்து திரும்பும் வழியில் அதே வளாகத்தில் உள்ள கல்வி துறை கட்டிடத்தை கடந்த உடன் வெடித்து சிதறியது.

அதே வளாகத்தில் 7 அரசு அலுவலகங்கள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களில் அதிகமானோர் துருக்கி, சூடான் மற்றும் மற்ற நாடுகள் வழங்க இருந்த கல்வி உதவித் தொகையை பெற வந்தவர்கள், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+