உலக குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாசிற்கு வெண்கலம் உறுதி
பாகூ: இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து அவருக்கு வென்றாலும், தோற்றாலும் வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளது.
அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகூ நகரில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் விகாஸ் கிருஷ்ணன், ஜெய் பகவான், தேவின்தேரோ சிங் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் காலிறுதி வரை 4 பேரும் காலிறுதி வரை முன்னேறினர்.
இந்நிலையில், 69 கிலோ பிரிவில் கலந்து கொண்ட விகாஸ் கிருஷ்ணன், மால்டோவாவை சேர்ந்த வாசிலி பெலோயசை 9-8 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் விகாஸ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். மற்ற 3 பேரும் தோல்வியை தழுவினார். அரையறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள விகாஸ் கிருஷ்ணனுக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகி உள்ள நிலையில், அரையறுதியில் உக்ரைனை சேர்ந்த தாராஸ்சை எதிர்கொள்ள உள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விரேந்தர் சிங் இந்திய தரப்பில் வெண்கலம் வென்றார். அதன்பின் முதல் விகாஸ் மூலம் இந்தியாவி்ற்கு வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து விகாஸ் கூறியதாவது, இந்த தொடரில் தங்கம் வெல்வது மிகவும் சிரமம். எனினும் போட்டியில் தங்கத்தை குறி வைத்து எனது முழுதிறனையும் செலுத்துவேன். வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளதால், கவனக் குறைவாக செயல்பட போவதில்லை. உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நாட்டிற்கு பதக்கம் வென்றதும், அரையறுதி வரை முன்னேறி இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications