சந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில் இருந்து பார்த்தால் சாம்பல் நிறம் பூசியது போல தோற்றம் அளிக்கிறது. ஆனால் தகுந்த கருவிகளுடன் பார்த்தால், சந்திரன் பல நிறங்களில் ஒளிர்வது தெரியும்.
இதன்மூலம் சந்திரனில் பல வேதிப் பொருட்கள் உள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பூமியில் உள்ளதை விட, இரும்பு மற்றும் டைட்டானிய தாதுக்கள் சந்திரனில் அதிகளவில் காணப்படுகிறது. டைட்டானியம் என்பது இரும்பை விட உறுதியானது. ஆனால் எடை குறைந்தது. இதனால் அதிக விலை மிக்கதாக உள்ளது.
பூமியில் டைட்டானியம் மிக குறைந்த அளவில் அதாவது 1 சதவீதம் மட்டுமே காணலாம். தற்போதைய ஆராய்ச்சிகளின் மூலம் சந்திரனில் 10 சதவீதத்திற்கு மேலாக டைட்டானியம் உள்ளதாக தெரிகிறது. மேலும் சந்திரனில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களும் உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications