மாறனின் 'டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்': தொலைத்தொடர்புத் துறையிடம் விளக்கம் கேட்கும் சிபிஐ
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீட்டுக்கும், சன் டிவி அலுவலகத்திற்கும் சட்டவிரோதமாக இணைப்புகள் கொடுத்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு தொலைத்தொடர்புத் துறையை சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல் தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சை அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
இதையடுத்து இந்த புகார்களை மறுத்து தயாநிதி மாறன் அறிக்கை வெளியிட்டதோடு அந்த பத்திரிக்கைச் செய்தியில் கூறியுள்ளது போல தான் முறைகேடு எதையும் செய்யவில்லை என்று விளக்கமளித்தார்.
இதுபோன்ற அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக நாளிதழ் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 10 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பி.எஸ்.என்.எல். நிறுவனமோ தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு ஒரே ஒரு இணைப்பைத் தான் கொடு்தததாகவும், அதன் எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் விளக்கம் அளித்தது. ஒரு இணைப்பைத் தவிர அவரது வீட்டிற்கு வேறு இணைப்பே வழங்கவில்லை என்றது. ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜரின் பெயரில் இருந்தது தான் வியப்பளிக்கும் விஷயம்.
ஆனால் சிபிஐ மாறனின் விளக்கத்தை நம்பத் தயாராக இல்லை. அதை தெரிவிக்கும் வகையில் தான் மாறனின் போட் கிளப் வீட்டிற்கும், சன் டிவி அலுவலகத்திற்கும் சட்டவிரோதமாக இணைப்பு கொடுத்தது குறித்து தொலைத் தொடர்புத் துறையிடம் சிபிஐ விளக்கம் கேட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று மாறனின் சென்னை போட்கிளப் வீடு, டெல்லி, ஹைதராபாத் வீடுகள், கலாநிதி மாறனின் வீடு, சன் டிவி அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications