திருச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 20ம் தேதிக்கு மாற்றம்
சென்னை: திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 17ம் தேதிக்குப் பதில் 20ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை 17ம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், திருச்சி இடைத் தேர்தல் முடிவு வாக்காளர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், அவர்களது முடிவுகளை கலைக்கலாம் என்று பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தெரிவித்தன. எனவே திருச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்தன.
இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதிக்குப் பதில் 20ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications