தென்காசி நகராட்சியில் 17 வார்டுகளில் திமுக போட்டியிடவில்லை
தென்காசி: தென்காசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 17 வார்டுகளில் திமுக போட்டியிடவில்லை.
தென்காசி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் 46,660 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கோமதிநாயகம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டாலும், 17 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு அக்கட்சியின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை.
3,4,9,10,16,17,18,19,21,22,23,24,25,29,30,31,32 ஆகிய 17 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் தென்காசி நகராட்சி தேர்தலில் அந்த அறிவிப்பினை கட்சி நிர்வாகிகள் செயல்படுத்தவில்லையே என்ற தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
29வது வார்டில் அதிமுக போட்டியிடவில்லை. நகராட்சி தலைவர் பதவி மற்றும் 9 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தலைவர் பதவி தவிர்த்து காங்கிரஸ் 15 வார்டுகளிலும், தேமுதிக 19 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
குற்றாலத்தில் ஆசையாக குளிக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி.. ஆர்ப்பரித்த தண்ணீரில் மூச்சுத்திணறல்!












Click it and Unblock the Notifications