ராஜபக்சேவை சந்தித்தார் இந்திய வெளியுறவு துறை செயலர் ரஞ்சன் மத்தாய்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொலைகளும்,தாக்குதல்களும் தொடர்ந்து வருவதால் தமிழக மீனவர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இந்த விஷயத்தில் மத்திய அரசு வாய் மூடி மெளனம் சாதிப்பது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 3 நாள் அரசு முறை பயணமாக இந்திய வெளியறவு செயலர் ரஞ்சன் மத்தாய் இலங்கை சென்றுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் புதுப்பிக்கும் பணிக்காக இந்திய உதவுக்கரம் நீட்டியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில்வே தண்டவாளங்கள் அமைத்தல், சாலை அமைத்தல், பாதிக்கப்பட்ட வீடுகளை கட்டித் தருதல் உள்ளிட்ட பணிகளில் இந்திய உதவி வருகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை ரஞ்சன் மத்தாய் ஆய்வு செய்தார். பின்னர் ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழக மீனவர்களின் நிலை குறித்து ரஞ்சன் மத்தாய் முக்கிய பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தியதாக கருதப்படுகிறது.
எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் ஆதரவு கட்சியினரையும் சந்தித்து பேச உள்ளார் மத்தாய். இலங்கை செல்லும் முன் தமிழகத்திற்கு வந்த ரஞ்சன் மத்தாய், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து ஜெயலலிதா பேசினார்.
அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளில் தாக்குதல் நடத்துவது போன்ற தாக்குதல் தான் தமிழக மீனவர்கள் நடப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் நேற்றும் 15 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications