திருச்சி வந்தார் கருணாநிதி- இன்று மாலை பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்
திருச்சி: திமுக தலைவர் கருணாநிதி திருச்சி வந்து சேர்ந்தார். இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டப் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீ்ண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அங்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
இன்று காலை இதற்காக மலைக்கோட்டை ரயில் மூலம் புறப்பட்டு திருச்சி வந்து சேர்ந்தார் கருணாநிதி. ரயில் நிலையத்தில் கருணாநிதிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து பிரமாண்ட வரவேற்பளித்தனர்.
பின்னர் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார் கருணாநிதி. அங்கு கட்சிப் பிரமுகர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இன்று மாலை 6 மணிக்கு புத்தூர் நான்கு சாலை சந்திப்பில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகிறார்.
கே.என்.நேருவுக்கான இந்தக் கூட்டத்தில் திருச்சி மேயர் வேட்பாளர் விஜயா ஜெயராச் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான திமுக வேட்பாளர்களை ஆதரித்தும் கருணாநிதி வாக்கு சேகரிக்கிறார்.
பிரசாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு இன்று இரவே கருணாநிதி சென்னை திரும்புகிறார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications