6 இந்தியர்கள் உட்பட 23 பணியாளர்களுடன் பயணித்த இத்தாலி சரக்கு கப்பல் கடத்தல்
ரோம்: இத்தாலி நாட்டை சேர்ந்த 6 இந்தியர்கள் உட்பட 23 பயணியர்களுடன் சென்ற சரக்குக் கப்பலை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
சோமாலியா கடற் கொள்ளையர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. நாளுக்கு நாள் இவர்கள் அட்டகாசம் அதிகரித்தபடியேதான் உள்ளது. இங்கிலாந்து நாட்டின் லீவர்பூலில் இருந்து வியட்நாம் நோக்கி இத்தாலி நாட்டு டி'அலிசியோ என்ற தனியார் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. 6 இந்தியர்கள், 7 இத்தாலியர்கள், 10 உக்ரைன் நாட்டினர் என மொத்த 23 பணியாளர்கள் அந்த கப்பலில் பயணித்தனர்.
சோமாலியா கடற்கரையின் கிழக்கு பகுதியை விட்டு, சுமார் 620 மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, கப்பலை 5 சோமாலியா கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் தங்களது பகுதிக்குள் திருப்பிச் சென்று விட்டனர்.
கப்பல் கடத்தப்பட்ட சில நிமிடத்தில், தங்களது கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தாங்கள் முயற்சித்து வருவதாகவும் கேப்டனிடமிருந்து தகவல் வந்தது. ஆனால் பின்னர் அதுவும் நின்று விட்டது. இதன் மூலம் கப்பல் கொள்ளையர்கள் வசம் போய் விட்டதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து ஐக்கிய ஐரோப்பிய மீட்புக் குழு கமாண்டர் ஹாரி ஹாரிசன் கூறியதாவது, மாயமான கப்பலை தேடும் பணியில் போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. கப்பல் இருக்கும் இடம் விரைவில் கண்டறியப்படும், என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications