அதிமுக தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி உள்பட 28 நிர்வாகிகளுக்கு ஜெ. கல்தா
சென்னை: கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்காக தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி உள்பட 28 பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் நடந்து கொண்டதாகவும், உள்ளாட்சி மன்ற தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் கீழ்கண்டவர்கள் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
வட சென்னை மாவட்டம் லட்சுமிபாய் (வில்லிவாக்கம் 96-வது வட்ட பகுதி கழக துணை செயலாளர்), ஜாம்புலிவடிவேலு (34-வது வட்டம் பெரம்பூர் பகுதி), வி.ஜே. குமார் (ஆர்.கே.நகர் 35-வது வட்ட அண்ணா தொழிற்சங்க பகுதி செயலாளர்). தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பி.லோகு (127-வது வட்டம்) சென்னை மாநகராட்சி 156-வது வட்டத்தைச் சேர்ந்த திருமாறன். காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம் தாம்பரத்தைச் சேர்ந்த 3-வது வார்டு அதிமுக செயலாளர் முருகேசன், 23-வது வார்டு அதிமுக செயலாளர் மாசிலாமணி, 8-வது வார்டு அதிமுக செயலாளர் தனபால், தலைமை கழக பேச்சாளர் மூர்த்தி.
பல்லாவரம் 20-வது வார்டு நகர ஜெயலலிதா பேரவை தலைவர் மதுரை வீரன், பம்மல் 7-வது வார்டு நகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பிரதாபன். அனகாபுத்தூர் வேலாயுதம் (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர்) 12-வது வார்டு செயலாளர் வடிவேல், 2-வது வார்டு நகர மகளிர் அணி செயலாளர் சூரியகலா, 2-வது வார்டு நகர மகளிர் அணி பொருளாளர் மகேஸ்வரி, 13-வது வார்டு நகர மகளிர் அணி இணை செயலாளர்கள் சாகு செல்வம், நகர முன்னாள் அவை தலைவர் தயாளன், நகர எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் தயாளன்.
செம்பாக்கம் பேரூராட்சி 8-வது வார்டு மாவட்ட பிரதிநிதி வேலு, பீர்க்கன்கரணை பேரூராட்சி ஜெயலலிதா பேரவை செயலாளர் கேபிள் குணா, திருநீர்மலை 9-வது வார்டு செயலாளர் ரகு. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி முன்னாள் நகர சபை தலைவர் பூவை ஞானம், திருத்தணி ஒன்றிய விவசாய பிரிவு துணை செயலாளர் வெங்கடேசன், அருங்குளம் ஊராட்சி ஒன்றிய அதிமுக செயலாளர் முரளி, மீஞ்சூர் சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் ஜமால். மீஞ்சூர் ஒன்றியம் 12-வது வார்டை சேர்ந்த அர்ஜுனன்,
திருவள்ளூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பூத்தபேடு ஜெயபால், மாதவரம் நகர அதிமுக மாவட்ட பிரதிநிதி பூவராகவன், அம்பத்தூர் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் திவாகர். இதுபோல் பல்வேறு மாவட்டங்களில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். கழக உடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications