அமைச்சர் சின்னையா வீடு அருகே அடுத்தடுத்து 7 கடைகளில் பணம், பொருட்கள் கொள்ளை
சென்னை: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் டி.கே.எம். சின்னையாவின் வீட்டுக்கு வெகு அருகே அடுத்தடுத்து 7 கடைகளின் பூட்டை உடைத்த திருடர்கள் அங்கிருந்து பணம், பொருள் உள்ளிட்டவற்றை சூறையாடியுள்ள செயல் சென்னை தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகரான தாம்பரத்தில் உள்ள பாரத மாதா தெருவில்தான் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்த தெருவில்தான் அமைச்சர் சின்னையா வசித்து வருகிறார். இவரது வீட்டை ஒட்டி உள்ள 7 கடைகளில் நேற்று இரவு சிலர் பூட்டை உடைத்து பணம், பொருள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
அமைச்சர் வீட்டுக்கு அருகேயே நடந்த இந்த துணிகர திருட்டால் தாம்பரம் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்களில் சமீப காலமாக வழிப்பறி, சங்கிலிப் பறிப்பு, வீடுகளை உடைத்துத் திருடுதல், கொலை என குற்றச் செயல்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அமைச்சரின் வீட்டுக்கு அருகேயே நடந்துள்ள இந்த திருட்டுச் செயல் மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications