இனி கட்சி அங்கீகாரம் பெற 8 சதவீத ஓட்டு மட்டும் போதும்: தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி
டெல்லி: மாநில கட்சிகளின் அங்கீகாரத்திற்கு 8 சதவீத ஒட்டுகள் போதுமானது என தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. இந்த முடிவை தேர்தல் ஆணையம் எப்போதோ எடுத்திருந்தால் இன்னேரம் தேமுதிகவுக்கு முன்கூட்டியே அங்கீகாரம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடும் மாநில கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க, 6 சதவீத ஓட்டுகளை பெற்று, சில இடங்களில் வெற்றியும் பெற வேண்டும் என தற்போது விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதிமுறையால் ஓட்டுக்களை வாங்கியும் கூட வெற்றி கிடைக்காததால், அங்கீகாரம் பெறமுடியாமல் தேமுதிக போன்ற கட்சிகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி கூறியிருப்பதாவது, கடந்த தேர்தலில் 6 சதவீதம் ஓட்டு எண்ணிக்கையும், சில இடங்களில் வெற்றியும் பெற்ற ஒரு மாநிலக் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட வெற்றிப் பெறவிட்டாலும் சில கட்சிகள் 8 முதல் 10 சதவீத ஓட்டுகளை பெற்று இருந்தன.
அந்த கட்சிகளுக்கு தற்போது உள்ள விதிமுறைகளின்படி அங்கீகாரம் வழங்க முடியவில்லை. நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளின் கருத்துகளின் அடிப்படையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநில கட்சிகளின் அங்கீகாரத்திற்கு 6 சதவீத வெற்றி தேவை என்பதை 8 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஆனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இல்லை. தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில், ஒரு மாநிலக் கட்சிக்கு 8 சதவீதம் ஓட்டுகள் கிடைப்பதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது, என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications