தமிழகத்தில் எல்லா தேர்தல்களிலும் இனி காங்கிரஸ் தனித்தே போட்டி-தங்கபாலு

உள்ளாட்சி தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தங்கபாலு வெளியிட அதை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, ராஜீவ்காந்தி நமது நாட்டுக்கு தந்த உன்னதமான திட்டம் பஞ்சாயத்து ராஜ். மற்ற மாநிலங்களில் பஞ்சாயத்து ராஜ் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
மத்திய, மாநில அரசுகளைப்போல பஞ்சாயத்து அமைப்புகளும் தனி அதிகாரம் பெற்றவை. மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அமைச்சருக்குரிய அந்தஸ்து உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அதிகாரங்களை அதிகாரிகளே வைத்து இருக்கிறார்கள்.
இதனால் மக்களுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்கவில்லை. மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழக காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளோம்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து உள்ளனர். இனி வரும் காலங்களில் பஞ்சாயத்து தேர்தல் முதல் நாடாளுமன்றம் தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும்.
திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை காப்பதற்காக காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications