கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடினால் தமிழக வளர்ச்சி பாதிக்கப்படும்- ஜெ.வுக்கு பிரதமர் பதில்
டெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூடங்குளம் பணிகள் தொடர ஆதரவு கேட்டு தமிழக முதல்வருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மின்சாரத் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2 உலைகளின் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 925 மெகாவாட் தமிழகத்தி்ற்கு கொடுக்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தை கைவிட்டால் அதனால் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும்.
அணுசக்தி மின்சாரத்திற்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடமாட்டோம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். கூடங்குளம் மக்களின் கவலை எங்களுக்கு புரிகிறது. அவர்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்பாதாரத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் விவகாரம் தொடர்பாக மன்மோகன் சிங் ஜெயலலிதாவுக்கு கடந்த 4 நாட்களில் எழுதியுள்ள இரண்டாவது கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராடப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ள நிலையில் பிரதமர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications