அத்வானி பொதுக் கூட்டத்துக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுப்பு

இந்த மாவட்டத்தில் உள்ள முகல்சராயில் ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தில் இன்று மாலை அவரது பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந் நிலையில் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் அரசியல் நிகழ்ச்சி நடைபெறுவதை அனுமதிப்பதில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தயக்கம் காட்டினர். இதையே காரணம் காட்டி, பொதுக் கூட்டம் நடத்த அனுமதி தர முடியாது என மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து இந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுஷ்மாவின் விரதத்தால் ரத யாத்திரை பாதையில் மாற்றம்:
இந் நிலையில் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் 'கர்வா சவுத்' விரதம் இருக்க இருப்பதால், அத்வானியின் ரத யாத்திரையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருமணமான பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி காலை முதல் நிலவு வரும் வரை விரதம் இருப்பதே 'கர்வா சவுத்'.
ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிராக அத்வானி நடத்தி வரும் ரத யாத்திரை மத்தியப் பிரதேசத்தில் உள்ள விதிஷா பகுதிக்கு வரும் 15ம் தேதி செல்ல இருந்தது. இது சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டு வென்ற நாடாளுமன்றத் தொகுதியாகும்.
ஆனால். அன்றைய தினம் டெல்லியில் சுஷ்மா 'கர்வா சவுத்' விரதம் இருக்கப் போவதாக கூறிவிட்டதால், அவர் இல்லாத நிலையில் அவரது தொகுதிக்குச் செல்வதை அத்வானி தவிர்த்துவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா சுஷ்மா?:
முன்னதாக நேற்று அத்வானியின் ரத யாத்திரை தொடங்கிய பின்னர் சுஷ்மா சுவராஜுக்கு மிகுந்த சோர்வு ஏற்படவே அவர் உடனடியாக பாட்னா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ரத யாத்திரைப் பணிகளை செய்து வந்த சுஷ்மா மிகுந்த களைப்பு காரணமாக சோர்வடைந்ததாகவும், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பின் உடனடியாக அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வந்தன.
ஆனால், சுஷ்மா இதை மறுத்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''The News is totally incorrect. No hospitalisation, no Doctor, nothing. I am in the Hotel room'' என்று கூறியுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications