அத்வானியின் ரத யாத்திரை: ரூட் மேப்

ஜன் சேத்னா ரத் யாத்ரா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த யாத்திரை 38 நாட்கள் நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 12,000 கி.மீ. தூரம் அத்வானி பயணம் செய்யவுள்ளார். தினந்தோறும் சுமார் 300 கி.மீ. தூரம் பயணம் செய்யவுள்ள அத்வானி, 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் யாத்திரை மேற்கொள்கிறார்.
பிகாரின் சிதாப்தியாரா என்ற இடத்திலிருந்து அத்வானியின் யாத்திரை கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இது சோஷலிசவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த இடமாகும். அத்வானியின் ரத யாத்திரையைத் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தொடங்கி வைத்தார். யாத்திரையின் மூன்றாம் நாளான இன்று அத்வானி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரனாசியை அடைந்துள்ளார்.
அத்வானியின் ரத யாத்திரை 6 கட்டங்களாக நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை அவர் ரத யாத்திரை மேற்கொள்கிறார். மொத்தம் 100 மாவட்டங்கள் வழியாக அவர் செல்கிறார்.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 14 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார். குஜராத்தில் 5 நாட்கள் ரத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையின்போது அத்வானி அயோத்தி, சோம்நாத் போன்ற நகரங்களுக்கு செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
| Watch Video |
குஜராத்தில் அவருடைய ரத யாத்திரையை முதல்வர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார்.
அடுத்த மாதம் 20ம் தேதி டெல்லியில் இந்த ரத முடிவடைகிறது. அன்று டெல்லியில் மாபெரும் பொதுக் கூட்டத்துக்கும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications