தமிழகத்தில் சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: டாக்டர் ராமதாஸ்
சிதம்பரம்: சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று தமிழக முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் இன்று தமிழக எதிர்கட்சி தலைவர். எனவே, சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம், விருத்தாசலம், நெய்வேலி, வடலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, திராவிட கட்சிகளான தி.மு.க.-அ.தி.முக. ஆகிய கட்சிகள் தமிழகத்தை கடந்த 44 ஆண்டுகளாக கொள்ளை கூடாரமாக மாற்றிவிட்டனர். திராவிட கட்சிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், திராவிட கட்சிகளை உதறவிட்டு வெளியில் வந்தோம்.
திராவிட கட்சிகள் தான் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு வழங்குவதால் வறுமையை ஒழித்துவிட முடியாது. சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் எதிர்கட்சி தலைவர். எனவே சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
நாட்டின் வளர்ச்சியைத் தடுத்த திராவிட கட்சிகளை வேரறுப்பது தான் பா.ம.க.வின் முக்கிய பணியாகும். 2016 ல் தமிழகத்தில் பா.ம.க.ஆளும் கட்சியாக உயர்த்தி காட்டுவோம். தமிழகத்தை ஆளும் தகுதி பா.ம.க.விற்கு மட்டுமே உள்ளது, என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications