சீர்காழி, வேதாரண்யம் டிஎஸ்பிக்கள் இடமாற்றம்: சோ. அய்யர் அதிரடி
சென்னை: சீர்காழி, வேதாரண்யம் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்ய மாநிலத் தேர்தல் ஆணையர் சோ. அய்யர் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று நாகப்பட்டினம் மாவட்டத் தேர்தல் கண்காணிப்பாளர் அளித்த புகாரின்பேரில் அவர்களை இடமாற்றம் செய்ய அய்யர் உத்தரவிட்டுள்ளார்.
200 திமுக வேட்பாளர்கள் வழக்கு- நாளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இந் நிலையில் சென்னை மாநகராட்சி தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் 200 திமுக வேட்பாளர்களும் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி் தேர்தலில் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர் பூங்குன்றன் என்பவர் சென்னை உயர்நீதி்மன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலி்ல போட்டியிடும் 200 திமுக வேட்பாளர்களும் இதேபோன்ற ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில், சென்னை மாநகராட்சி தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மாநில தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருகிறது. இதனால் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வாக்குப் பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை இன்று தலைமை நீதிபதி எம்.ஒய் இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இன்று மாலைக்குள் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று பிற்பகலில் தேர்தல் ஆணையத்தின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications