வாக்காளர்களுக்கு தருவதற்காக ரூ.40,000 பதுக்கி வைத்திருந்த அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.40,000 பணத்தை பதுக்கி வைத்திருந்த அங்கன்வாடி பணியாளரை கலெக்டர் சகாயம் சஸ்பெண்ட் செய்தார்.
மதுரை மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்கள், அண்டா-குண்டாக்கள், மதுபாட்டில்கள், வேட்டி-சேலைகளை கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கலெக்டர் சகாயத்தின் உத்தரவின் பேரில் மல்லப்புரம் கிராம நிர்வாக அலுவலர் நாகசுந்தரம் மற்றும் கிராம அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சாணார்பட்டி அங்கன்வாடி பணியாளர் ரூபினியும் அவரது மகன் வினோத்தும் மல்லப்புரம் ஊராட்சி மன்ற ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பின்னியம்மாள் என்பவருக்காக வாக்காளர்களுக்கு பணம் தந்து வருவதும், மேலும் வினியோகிப்பதற்காக ரூ.40,000 பணத்தை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக அங்கன்வாடி பணியாளர் ரூபினியை கலெக்டர் சகாயம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications