மதுரையில் வாக்குச்சாவடி தெரியாமல் அலைந்து திரிந்த அதிமுக எம்.எல்.ஏ.
Subscribe to Oneindia Tamil
மதுரை: அதிமுக எம்.எல்.ஏ. ஏ. கே. போஸ் வாக்குச்சாவடி தெரியாமல் இங்கும், அங்குமாக அலைந்து திரிந்து ஒருவகையாக வாக்களித்துவிட்டுச் சென்றார்.
மதுரை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ். வாக்களிப்பதற்காக மதுரை சுந்தர்ராஜபுரத்தில் உள்ள டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். தனக்குரிய வாக்குச்சாவடி எங்கிருக்கிறது என்று தெரியாமல் சிறிது நேரம் இங்கும், அங்கும் அலைந்தார்.
ஒரு வழியாக ஒரு வாக்குச்சாவடியைக் கண்டுபிடித்து வரிசையிலும் நின்றுவிட்டார். அதன் பிறகு தான் அது பெண்களுக்கான சாவடி வரிசை என்பதை தெரிந்து கொண்டார். பின்னர் மீண்டும் ஆண்களு்ககான வரிசையைத் தேடித் திரிந்தார்.
இறுதியில் தேர்தல் அலுவலர்கள் உதவியுடன் சரியான வாக்குச்சாவடியைக் கண்டுபிடித்து வாக்களித்துவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications