அரவிந்த் கேஜரிவால் மீது ஷூ வீச்சு.. தாக்கவும் முயற்சி!

இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது. கூட்டத்தில் பேசுவதற்காக அமர்ந்திருந்த அரவிந்த் கேஜரிவாலை நோக்கி தனது ஷூவை வீசிய நபர், பின்னர் அவரை தாக்கவும் முயன்றார். இதையடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் அவரை புரட்டி எடுத்தனர்.
''நாட்டு மக்களை ஹசாரே குழு ஏமாற்றி வருவதாகவும், இதனால் தான் காலணியை வீசி தாக்குதல் நடத்தியதாகவும்'' அந்த நபர் கூறியுள்ளார். அந்த நபரின் பெயர் ஜிதேந்தர் என்று தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தான் இந்தக் குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷண், காஷ்மீர் குறித்த சர்ச்சையான கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து தாக்கப்பட்டார். இந் நிலையில் இன்று அரவிந்த் மீது தாக்குதல் நடந்துள்ளது.
'உள் பூசல்'- ஹசாரேவின் குழுவிலிருந்து 2 பிரமுகர்கள் விலகல்:
இந் நிலையில் லோக்பால் விவகாரத்தில் எங்களது அணி மிக ஒற்றுமையாக செயல்படும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ள நிலையில், அவரது குழுவில் நிலவி வரும் உள் பூசல் வெளியில் வந்துள்ளது.
அந்தக் குழுவைச் சேர்ந்த இரு முக்கிய உறுப்பினர்களான பி.வி.ராஜகோபால், ராஜேந்திர சிங் ஆகியோர் அதிலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த இருவருக்கும் அரவிந்த் கேஜரிவாலுக்கும் ஒத்துப் போகவில்லை என்று தெரியவந்துள்ளது. கேஜரிவால் மிகவும் அதிகாரத் தோரணையுடன் நடந்து கொள்வதாக இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரஷாந்த் பூஷண் விவகாரத்திலேயே ஹசாரேவின் குழுவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது தனிப்பட்ட மோதல்களால் இருவர் ராஜினாமா செய்யும் நிலை உருவாகியுள்ளது.
எங்கள் குழு குறித்து தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. நாங்கள் மிக ஒற்றுமையாக இருக்கிறோம் என்று நேற்று தான் அன்னா ஹசாரே நிருபர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இன்று இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications