ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை குறைத்த இங்கிலாந்து!
Business
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
லண்டன்: ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கான வேலைவாய்ப்புகளை இங்கிலாந்து அரசு சரமாரியாகக் குறைத்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்படவுள்ளது.
இங்கிலாந்தில் பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க 'shortage occupation list' என்ற பட்டியல் உள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள பணிகளுக்கு வெளிநாட்டினரை வேலைக்குச் சேர்க்க இங்கிலாந்து அரசு அந் நாட்டு நிறுவனங்களை அனுமதிக்கிறது.
இந் நிலையில், இந்தப் பட்டியலில் உள்ள பார்மஸிஸ்ட், கால்நடை மருத்துவர்கள், ஸ்பீச் தெராபிஸ்ட்சுகள், பள்ளிகளுக்கான உயிரியல் ஆசிரியர்கள், இசைக் கலைஞர்கள், எலும்பு சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட பணிகளில் ஐரோப்பியர் அல்லாத பிற நாட்டினருக்கு தடை விதிக்கவுள்ளது இங்கிலாந்து.
இதனால் இந்தப் பட்டியலில் உள்ள சுமார் 40,000 வேலைவாய்ப்புகள் ஐரோப்பியர்களுக்கே கிடைக்கும்.
Britain today cut more categories in the 'shortage occupation list' under which professionals from India and other non-EU countries could come here for work, leading to an expected drop of 40,000 non-EU workers entering the country every year. The David Cameron government accepted the recommendation of the Migration Advisory Committee (MAC) to specialist jobs such as pharmacists, veterinary surgeons, and speech and language therapists. Occupations that the MAC recommended be removed from the list include: secondary education biology teachers; speech and language therapists; pharmacists; orthoptists; veterinary surgeons; and, rank and file orchestral musicians