கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை மத்திய அரசு கைவிட பழ.நெடுமாறன் கோரிக்கை
இடிந்தகரை: கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இடிந்தகரைக்கு வந்த தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இந்த பகுதி மக்கள் நடத்தும் போராட்டம் தமிழக மக்களுக்காகவும், குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காகவும் நடத்துகிற போராட்டம்.
அறிவியல் துறையில் மிக முன்னேறிய ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலேயே அணு உலையால் பெரும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. நமது நாடு அந்த நாடுகளை போல அறிவியல் துறையில் நமது நாடு முன்னேறிய நாடு அல்ல. அறியாமை மக்கள் வாழும் நமது நாட்டில் அணுஉலை விபத்து ஏற்பட்டால் அதை எப்படி தடுப்பது, எப்படி பாதுகாத்துக் கொள்வது என மக்களுக்கு தெரியாது.
எனவே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கையாக இதை கருதி கூடங்குளம் அணுமின் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக தென் மாவட்ட மக்கள் ஒன்று திரள வேண்டும். பிற பகுதிகளை சேர்ந்த தமிழக மக்களும் உறுதுணையாக நிற்க வேண்டும்.
மேலும், தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை அழைத்து இந்த போராட்டத்தில் பங்கு பெறுவது குறித்தும் ஆலோசித்து வருகிறேன், என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications