For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குப் பதிவின்போது வன்முறை-மாஜி அமைச்சர் சாமி மகன் உள்பட 8 பேர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: வாக்குப் பதிவின்போது வன்முறையில் ஈடுபட்டதாக முன்னாள் திமுக அமைச்சர் கேபிபி சாமியின் மகன் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை மாநகராட்சி தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றபோது திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகர் அருகே திடீரென வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இதில் செல்வமணி என்ற மீனவர், அவரது மனைவி வெண்ணிலா ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து இதுகுறித்து விசாரித்த எண்ணூர் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வன்முறையில் முன்னாள் அமைச்சர் சாமியின் மகன் இனியவன் உள்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இனியவன், சாமியின் உறவினர்களான அருள் ராஜ், பாபு, ஜெயக்குமார், நாகேஸ்வரன் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். சாமியின் 2வது மகன் பிரபாகர், தம்பி கேபிபி சங்கரின் மனைவி கஸ்தூரி உள்பட 9 பேரை போலீஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மீனவர்கொலை வழக்கில் கேபிபி சாமியும், தம்பி சங்கரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல இன்னொரு மகனையும், சங்கரின் மனைவியையும் போலீஸார் கைது செய்யத் தேடி வருவதால் சாமி குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
Former DMK Minister KPP Samy's son Iniyavan and 7 others have been arrested in an attempt to murder case. Police are searching Samy's another son Prabhakaran and Samy's brother Sankar's wife Kasthuri in this poll realted violence case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X