For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பயணம்: அமெரி்க்கர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தீவிரவாதிகள் பண்டிகை காலத்தில் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்பதால் அங்குள்ள அமெரி்ககர்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவும் என்று அமெரி்க்கா எச்சரித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்று அண்மையில் இந்திய அரசு அதிகாரிகளும், உள்ளூர் ஊடகங்களும் தெரிவித்துள்ளன. எனவே இந்தியாவில் வாழும், சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்கர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றுக்குச் செல்வதை தவிர்க்கவும்.

எங்கும் கிளம்புவதற்கு முன்பு உள்ளூர் செய்தி சேனல்களைப் பார்த்த பிறகு செல்லவும். எப்பொழுதும் விழி்ப்புடன் இருக்கவும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வரை இந்த எச்சரிக்கை பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
US has warned its citizens residing, touring in India to be alert as terrorists may attack the country during festive season. It has asked its citizens to avoid crowded places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X