ஒரே எண்ணிக்கையில் வாக்கு பெற்றால் குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்வு
நெல்லை: ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு, வாட்டார ஊராட்சி வார்டு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும்போது உரிய விதி்முறைகளைப் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
பெருமளவு வாக்குகளைப் பெற்றுள்ளவர்களில் இருவரோ அல்லது இருவருக்கும் மேற்பட்டவர்களோ சமமான வாக்குகளை பெறுகின்ற நிலை ஏற்படலாம். அவர்களில் ஒருவருக்கு ஒரு வாக்கினை கூடுதலாக சேர்ப்பதன் மூலம் அவருள் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர்களின் பெயர்களை ஒரே அளவிலான தனித்தனி துண்டு சீட்டுகளில் எழுதி குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து எந்த வேட்பாளர் பெயர் வருகிறதோ அவரே ஒரு கூடுதல் வாக்கினை பெற்றதாக கருத வேண்டும். அதன்படி அவரே தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications